news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews முழு சொத்தையும் உரிமை கோரிய தம்பி
tv

Also Watch

tv

Read this

முழு சொத்தையும் உரிமை கோரிய தம்பி

ஜான்சி, உத்தரப்பிரதேசம்

33

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

அண்ணனை காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் அளித்த தம்பி. ஒரு அறையில் மட்டும் தரை மேடு, பள்ளமாக இருந்ததால் போலீஸ்க்கு சந்தேகம். அண்ணனை கொலை செய்து சடலத்தை வீட்டிற்குள் குழிதோண்டி புதைத்ததாக பகீர் வாக்குமூலம் அளித்த தம்பி. 9 நாட்கள் அதே வீட்டில் பயமில்லாமல் வாழ்ந்து வந்த கொடூரன். உடன் பிறந்த அண்ணனை தம்பியே கோடாரியால் வெட்டிக் கொலை செய்தது ஏன்? கொடூர கொலையின் பின்னணி என்ன?

* அண்ணனை காணவில்லை என காவல் நிலையத்தில் தம்பி புகார்
* வீட்டு அறையின் தரை மேடு, பள்ளமாக இருந்ததால் சந்தேகம்
* தம்பி மசாரிக்கிடம் விசாரணையில் இறங்கிய போலீஸ்

பிப்ரவரி 15ம் தேதி. லோக்கல் போலீஸ் ஸ்டேஷனுக்கு போன இளைஞர் மசாரிக், 5 நாட்களா தன்னோட அண்ணன் தாரிக் பெக்க காணும், அவன் எங்க போனான்னு தெரியல, ஃபோனும் ஸ்விட்ச் ஆப்ல இருக்குன்னு சொல்லி புகார் அளிச்சுருக்காரு. உடனே போலீஸ் பல இடங்கள்ல தேடி அலைஞ்சுருக்காங்க. ஆனா எங்க தேடியும் அவர காணல. இதுக்கிடையில தாரிக்கோட மாமா கிட்ட போலீஸ் விசாரிச்சுருக்காங்க. அப்ப தாரிக் ரொம்ப நல்லவன், அவனுக்கு எதிரின்னு யாருமே கிடையாது ஆனா அண்ணனுக்கும், தம்பிக்கும் இடையில நீண்ட நாட்களா சொத்து பிரச்னை இருக்குதுன்னு சொல்லிருக்காரு. அதவச்சு போலீசார் முதல்ல தாரிக்கோட வீட்டுக்கு போய்ட்டு பார்வையிட்டாங்க. அப்ப தரைதளத்துல உள்ள ஒரு ரூம்ல ஒரே மண்ணா கிடந்துருக்கு. தரை மேடும் பள்ளமா இருந்துருக்கு. இதபாத்து சந்தேகமடைஞ்ச போலீஸ் எதுக்கு இந்த ரூம் மட்டும் மேடும் பள்ளமுமா இருக்குன்னு மசாரிக் கிட்ட கேட்ருக்காங்க.
அப்ப, மசாரிக் எந்த ஒரு பதிலும் சொல்லாம அமைதியா இருந்துருக்காரு. இதனால அவரு மேல சந்தேகம் அதிகமாகி, மேடும் பள்ளமா இருந்த இடத்த போலீஸ் தோண்டிருக்காங்க. அப்ப துணியால சுற்றப்பட்டு அழுகிப்போன நிலையில தாரிக் சடலம் மீட்க்ப்பட்டிச்சு. தாரிக்க கொலை செஞ்சது யாரு? எதுக்காக இந்த கொலை நடந்துச்சுன்னு மசாரிக் கிட்ட கேட்ருக்காங்க. அதுல தான் பல உண்மை தகவல்கள் வெளிவந்துச்சு.

* மேடும் பள்ளமாக கிடந்த இடத்தை தோண்டிய போலீசார்
* அழுகிய நிலையில் கிடந்த சடலத்தை மீட்டு விசாரித்த போலீஸ்
* கல்யாணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்து வந்த தாரிக்


உத்தரப்பிரதேசத்துல உள்ள ஜான்சி பகுதிய சேந்தவரு தாரிக். இவரோட தந்தை சமீபத்துல உயிரிழந்ததால, தாய் மற்றும் தம்பி மசாரிக் கூட வசிச்சுட்டு இருந்தாரு. தாரிக்கிற்கு இப்ப வர கல்யாணம் ஆகல. கிடைக்குற வேலைய செஞ்சுட்டு பிழைப்ப பாத்துட்டு இருந்துருக்காரு. தாரிக்கோட அப்பா ரொம்ப பணக்காரர். இவரு கிட்ட வீடு, நிலம், வயல்ன்னு நிறைய சொத்து இருக்குது. இவரோட சொத்து மேல அண்ணன், தம்பி ரெண்டு பேருக்குமே ஒரு கண்ணு இருந்துருக்கு. இதுக்கிடையில கடந்த 2 மாசத்துக்கு முன்னாடி தம்பி மசாரிக் அதே பகுதியை சேந்த ஒரு பெண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டாரு. அடுத்து தன்னோட தாய் கிட்ட பேசுன மசாரிக், அண்ணனுக்கு இப்ப வர கல்யாணம் ஆகல, அதனால அப்பா பேருல இருக்க எல்லா சொத்தையும் என் பேருல எழுதி வச்சுருங்கன்னு கேட்டிருக்காரு. அதுக்கு எல்லா சொத்தையும் உன் பேருல மட்டும் எப்படி எழுதி வைக்க முடியும், உங்க அண்ணனும் இருக்கான், அதனால ரெண்டு பேருக்கும் சரிக்கு சமமா தான் சொத்த பிரிச்சு கொடுக்க முடியும்ன்னு தாய் சொல்லிருக்காங்க. அப்ப அங்க இருந்த அண்ணன் தாரிக், எனக்கு கல்யாணமே ஆகலனாலும் எனக்கும் இந்த சொத்துல சரி பங்கு இருக்குன்னு சொல்லிருக்காரு.

* அண்ணன் - தம்பி இடையே ஏற்பட்ட சொத்து பிரச்சனை
* சொத்து முழுவதையும் கேட்டு சண்டையிட்ட தம்பி மசாரிக்
* தனக்கும் சொத்தில் பங்கு உண்டு எனக்கூறிய அண்ணன் தாரிக்


இதனால அண்ணன் தம்பிக்கு இடையில பயங்கர பிரச்னை ஏற்பட்டிருக்கு. அண்ணன் உயிரோட இருக்க வர்ற முழு சொத்தும் நமக்கு கிடைக்காதுன்னு நினைச்ச தம்பி, அண்ணனை கொலை பண்ணிட்டு சொத்த தன்பேருக்கு மாத்த திட்டம் போட்ருக்காரு. சம்பவத்தன்னைக்கு தாரிக்கோட தாய் வெளியூர்ல உள்ள சொந்தக்காரங்க வீட்டுக்கு போய்ட்டாங்க. அன்னைக்கு நைட்டு தாரிக் தன்னோட ரூம்ல தூங்கிட்டு இருந்தாரு. அப்ப அந்த அறைக்குள்ள போன மசாரிக் மறைச்சு வச்சுருந்த கோடாரிய எடுத்து அண்ணன கண்டந்துண்டமா வெட்டிக் கொன்னுருக்காரு. அடுத்து சடலத்த எங்க மறைக்குறதுன்னு தெரியாம விழி பிதுங்கி நின்ன தம்பி, தரைதளத்துல உள்ள ரூம்லையே குழி தோண்டி சடலத்த புதைச்சுருக்காரு. அடுத்து 9 நாட்கள் அதே வீட்லையே வசிச்ச மசாரிக், போலீசார் மற்றும் உறவினர்களோட கவனத்த திசை திருப்ப அண்ணன் காணாம போய்ட்டதா புகார் அளிச்சுருக்காரு. ஆனா உயிரிழந்தவரோட மாமா கொடுத்த தகவல வச்சும், தரை தளம் மேடும் பள்ளமா காணப்பட்டத வச்சும் மசாரிக் தான் கொலையாளின்னு தெரிஞ்சுக்கிட்ட போலீஸ் அவர அரெஸ்ட் பண்ணிட்டாங்க.

Related Link
ஆசைக்கு உடன்படாததால் ஆத்திரம்

ஆசைக்கு உடன்படாததால் ஆத்திரம்

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கலைஞர் கனவு இல்ல பயனாளி உடன் முதல்வர் சந்திப்பு

3
6 mins agoshare
கலைஞர் கனவு இல்ல பயனாளி உடன் முதல்வர் சந்திப்புbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved