Also Watch
Read this
By: Web Team

பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி அடுத்த வாரம் பிரேசில் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாடு அடுத்த மாதம் 6 மற்றும் 7-ம் தேதிகளில் பிரேசிலில் நடக்கிறது.
இந்த அமைப்பின் உறுப்பு நாடான இந்தியாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், அதில் பங்கேற்க பிரதமர் மோடி பிரேசில் செல்ல உள்ளார்.
இந்தப் பயணத்துடன் கானா, டிரினிடாட் டொபாகோ, அர்ஜென்டினா மற்றும் நமீபியா ஆகிய நாடுகளுக்கும் அரசு முறை பயணம் செல்ல உள்ளதாக தெரிகிறது.
இதையும் படியுங்கள் : ஜூலையில் தமிழ்நாட்டிற்கு 31.24 டி.எம்.சி. காவிரி நீர் திறக்க வேண்டும்..