உச்சநீதிமன்ற தீர்ப்பின் தமிழ்நாட்டிற்கு ஜூலை மாதத்தில் தர வேண்டிய 31.24 டி.எம்.சி. காவிரி நீரை தங்கு தடையின்றி திறந்து விட வேண்டும் என்று கர்நாடகாவுக்கு காவிரி நீர் ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி ஜூன் மாதத்திற்கு 9.19 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும் என்றும், ஆனால் கூடுதலாக 16 டி.எம்.சி. வரை தண்ணீர் திறந்து விடப்பட்டிருப்பதாகவும் கர்நாடகா தெரிவித்தது. காணொளி வாயிலாக நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகாவைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.இதையும் படியுங்கள் : நடிகர் கிருஷ்ணா, கெவினுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்..