மதுரை மாவட்டம் கோரிப்பாளையம் அருகே கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில், ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழந்த இளைஞரின் உடலை வாங்க மறுத்த உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திடீரென போராட்டத்தில் ஈடுப்பட்ட இளைஞர்கள் மற்றும் போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.