ஆனைமலை அடுத்த சேத்துமடையில் நட்சத்திர அந்தஸ்துடன் கூடிய டென்ட் விடுதி திறப்பு விழாவுக்கு வந்த வனத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் ரிப்பன் வெட்டி துவங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு டிராக் லோகோவை அறிமுகம் செய்து சுற்றுலாத்தலங்களில் உள்ள ட்ரக் தமிழ்நாடு பதிவேடுகளை வெளியிட்டார்,35 புதிய வாகனங்கள் துவக்கம்அதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள வனப்பகுதியில் ஏற்படும் தீ விபத்துகளைத் தடுக்கும் விதமாக அனைத்து வசதிகளுடன் கூடிய 35 புதிய வாகனங்களை கொடி அசைத்து துவங்கி வைத்தார் இந்த நிகழ்வில் வனத்துறை கூடுதல் செயலாளர் சுப்ரியா சாகு முதன்மை வன பாதுகாவலர், ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் மற்றும் வனச்சரக அலுவலர்கள் ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.வேட்டை தடுப்பு காவலர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுமா?பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் ராஜ கண்ணப்பன் கூறுகையில், ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் சேத்து மடை வனச்சரகத்திற்கு சொந்தமான இடத்தில் தனியார் அமைப்பின் மூலமாக டிரக் தமிழ்நாடு அமைப்பின் மூலமாக சுற்றுலா பயணிகளுக்கு புதிய நவீன வசதியுடன் ஐந்து டென்த் அமைக்கப்பட்டுள்ளது எனவும், வேட்டை தடுப்பு காவலர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுமா என கேள்விக்கு, அமைச்சர் மழுப்பனான பதில் சொல்லி சென்றது அங்கிருந்து அதிகாரிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. Related Link 22 - 29 வயதுக்குள் ஒரு கோடி பேர்