news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மலரத் தொடங்கிய பூக்களை சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசிப்பு
tv

Also Watch

tv

Read this

மலரத் தொடங்கிய பூக்களை சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசிப்பு

கொடைக்கானல்,திண்டுக்கல்

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
திண்டுக்கல் பூக்கள் தோட்டம்

மலர் கண்காட்சி :

மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் ஆண்டுதோறும் மே மாதத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்த மலர் கண்காட்சியை காண தமிழகம் மட்டுமில்லாது , பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆண்டுதோறும் கொடைக்கானலுக்கு படையெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பல்வேறு பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்ட மலர் நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்ட நிலையில் தற்போது பூங்காவில் மலர்கள் பூக்க தொடங்கியுள்ளது.

மேலும் வருகின்ற மலர் கண்காட்சியில் சுற்றுலாப்பயணிகளை மகிழ்விக்கும் வகையில் பூங்காவில் ஆயிரக்கணக்கான வண்ண வண்ண மலர்கள் தற்போது பூக்க தொடங்கியுள்ளது. இதில் சால்வியா, டெல்பினியம், ஆஸ்டர், பேன்சி வகைகள், பேட்டுனியா, குட்டை ரக சால்வியா, கேலண்டுலா, பிளாக்ஸ், செல்லோசியா, டேலியா மலர்கள் மற்றும் ரோஜா வகைகள் ஆகிய மலர்கள் தற்போது பூக்கத் தொடங்கியுள்ளதால் பிரையண்ட் பூங்கா
தற்போது களைகட்ட தொடங்கியுள்ளது.

மேலும் தற்போது சுற்றுலாப்பயணிகள் பூங்காவில் பூக்க தொடங்கியிருக்கும் வண்ண வண்ண மலர்களை கண்டு ரசிப்பதுடன், செல்பி மற்றும் புகைப்படங்களை எடுத்து மகிழ்ந்து வருகின்றனர். மேலும் இனி வரும் நாட்களில் பூங்கா முழுவதும் பூக்களால் நிரம்பி லட்சக்கணக்கான மலர்கள் பூத்து காண்போரை கவரும் வகையில் அமையும் என எதிர் பார்க்கப்படுகிறது.

மேலும் கொடைக்கானலில் மாலைவேளையில் லேசான குளிர்ந்த காற்று வீசிய நிலையில் சுற்றுலா பயணிகள் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்து வருகின்றனர்.

Related Link
மதுரை சித்திரை திருவிழா - வைகை அணையில் நீர் திறப்பு

மதுரை சித்திரை திருவிழா - வைகை அணையில் நீர் திறப்பு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விஜய் எடுத்த முடிவு.. வருகிறதா தளபதி 70?

0
58 mins agoshare
Vijay 70button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved