Also Watch
Read this
By: Manigandan Raja

மலையாளியா..? தமிழ்பெண்ணா.? - சர்ச்சையில் சாய் பல்லவி :
தாங்கள் மலையாளியா அல்லது தமிழ் பெண்ணா என்ற கேள்விக்கு தான் தமிழ் பெண் தான் என சாய் பல்லவி பேசியிருந்தது திரித்துக் கூறப்பட்ட நிலையில், சாய் பல்லவி அதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார். தான் மலையாளி இல்லை என்று எதார்த்தமாக கூறியது, வேறு விதமாக சமூக வலைதளங்களில் சித்தரிக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
மீண்டும் இணையும் 'லீடர்' திரைப்பட காம்போ :

லீடர் திரைப்படம் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்ற நிலையில், துரை செந்தில்குமார்- லெஜெண்ட் சரவணன் கூட்டணியில் மீண்டும் ஒரு திரைப்படம் உருவாக உள்ளதாக சினிமா உலகில் பேசப்படுகிறது. தந்தை-மகள் பாசத்தை வைத்து உருவான லீடர், லெஜெண்ட் சரவணனுக்கு நல்ல பெயர் பெற்றுத் தந்தது.
அரசன் திரைப்படம் வட சென்னை ஜானரில் இருக்குமா..?

வெற்றிமாறன்-சிம்பு கூட்டணியில் உருவாகி வரும் அரசன் திரைப்படத்தில் தான் நடித்து வருவதாகவும், இது வட சென்னை ஜானரில் இருக்குமா என்று தன்னால் உறுதியாக கூற முடியாது எனவும் நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் யோகி பாபு கூறினார். தானும், சிம்புவும் வரும் காட்சிகள் திரையரங்கில் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும் என அவர் கூறினார்.
'கர'திரைப்படம் அருமையாக வந்துள்ளது - ஜி.வி :

'கர' திரைப்படத்தை முழுமையாக பார்த்து விட்டதாகவும், படம் சிறப்பாக வந்துள்ளதாகவும் கூறியுள்ள இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார், இந்த திரில்லர் ஜானர் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'கர' வரும் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
அஜித்துடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த சுரேஷ் சந்திரா :

நடிகர் அஜித்-ஷாலினியின் 27ஆவது திருமண நாளையொட்டி, அஜித்துடன் எடுத்த புகைப்படத்தை அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். இயக்குநர்கள் வெங்கட் பிரபு, ஏ.எல் விஜய் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்டோரும் அஜித்துடன் உற்சாகமாக போஸ் கொடுத்தனர்.
அஜித்தின் "அமர்க்களம்" திரைப்படம் ரீ ரிலீஸ் :

அஜித் - ஷாலினி திருமணநாளை முன்னிட்டு இருவரும் இணைந்து நடித்த "அமர்க்களம்" திரைப்படம் நேற்று மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. 1999-ல் வெளியான இந்த திரைப்படம் ஆக்ஷன் மற்றும் காதல் காட்சிகள் நிரம்பியது. அஜித் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த படங்களுள் இதுவும் ஒன்று, இந்த திரைப்படத்தால் அஜித்தின் தனிப்பட்ட வாழ்க்கையிலும், திரை வாழ்க்கையிலும் பெரிய திருப்பமே ஏற்பட்டது.
நடிகர் சூரி கதாநாயகனாக நடித்துள்ள "மண்டாடி" திரைப்படம் :

நடிகர் சூரி கதாநாயகனாக நடித்துள்ள "மண்டாடி" திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக அறிவித்து சிறப்பு வீடியோவையும் படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையில், சூரியுடன் நடிகர்கள் சத்யராஜ், சுஹாஸ், மஹிமா நம்பியார், மிதுன் ஜெய்சங்கர், ரவீந்திர விஜய், பாலசரவணன், ஸ்டன்ட் சிவா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved