Also Watch
Read this
By: Web Team

திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூர் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் வேகத்தடை, எச்சரிக்கை பலகை உள்ளிட்டவற்றை அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருப்பாச்சூர் தாட்கோ நகர் மற்றும் திருப்பாச்சூர் செல்லும் வளைவு சாலையில் எவ்வித எச்சரிக்கை பலகையும், வேகத் தடையும் இல்லாததால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன.