ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அதிவேகமாக சென்ற ஆம்புலன்ஸ், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் சென்ற பெண் மீது மோதுவது போல் சென்று கவிழ்ந்து விழுந்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. பவானிசாகர் நால்ரோடு பகுதியில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி சைரன் ஒலி எழுப்பியபடி அதிவேகமாக சென்ற தனியார் ஆம்புலன்ஸ், நெகமம் முதல் பிரிவு அருகே இருந்த பேரிகார்டை கடக்க முற்பட்டபோது விபத்துக்குள்ளானது. இதில் சாலையில் நடந்து சென்ற பெண் நூலிழையில் உயிர் தப்பினாலும் விபத்தைக் கண்டு மயங்கி விழுந்தார். மேலும் ஆம்புலன்ஸில் சென்ற இருவரும் உயிர் தப்பினர்.இதையும் படியுங்கள் : ஆத்மநாத சாமி கோவிலின் ஆனி மாத திருவிழா... விமரிசையாக நடைபெற்ற ஆனி திருமஞ்சன திருத்தேரோட்டம்