news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஆணவ படுகொலை தடுப்பு சட்டம்; திருமாவளவன் வலியுறுத்தல்
tv

Also Watch

tv

Read this

ஆணவ படுகொலை தடுப்பு சட்டம்; திருமாவளவன் வலியுறுத்தல்

சென்னை

30

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
cm

ஆணவ படுகொலை தடுப்பு சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில், கவினின் தந்தை சந்திரசேகர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆகியோர் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தனர்.

பின்னர்,செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் கூறியதாவது:

கவின் குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். கொலையில் கூலிப் படையினருக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரிகிறது. எனவே, யாரும் தப்பித்து விடாத வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினோம்.

கவினின் தம்பிக்கு அரசு வேலை வழங்க வேண்டும். கவினின் தாய் அரசு ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். பாதுகாப்பான சூழல் இல்லை என்று அவர் கருதுவதால், சொந்த கிராமத்துக்கு பணி மாற்றம் செய்ய கோரிக்கை வைத்துள்ளோம். முதல்வர் உரிய நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம்.

ஆணவப் படுகொலை தடுப்புச் சட்டம் என்பது மிக முக்கியமான கோரிக்கை. இதனை தேர்தல் அரசியலோடு பொருத்திப் பார்க்கக் கூடாது.

இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 02052026

0
3 mins agoshare
ராசிபலன்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved