சிவராத்திரி கொண்டாட்டம் : கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் வரும் 15ம் தேதி நடைபெறும் 33 ஆவது மகா சிவராத்திரி கொண்டாட்ட விழாவில், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ், மத்திய இணையமைச்சர் எல். முருகன் ஆகியோரும் இந்த விழாவில் கலந்துகொள்கின்றனர். இதனைத் தொடர்ந்து, முன்னணி இசை மற்றும் நடனக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் இந்த விழாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. Related Link நாடாளுமன்றத்தில் அரட்டை அடித்த TMC எம்.பி.க்கள்