சமயபுரம் மாரியம்மன் கோவிலில், தைப்பூச திருவிழாவின் ஒரு பகுதியாக தெப்போற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. மூன்று முறை தெப்பத்தை வலம் வந்து அருள்பாலித்த அம்மனை, நான்கு புறங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பயபக்தியுடன் தரிசனம் செய்தனர்.