Also Watch
Read this
By: Web Team

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே, தனியார் ATM ல் வைப்பதற்காக கொண்டு செல்லப்பட்ட 29 லட்சம் ரூபாய் பணம் கத்தி முனையில் கொள்ளையடிக்கப்பட்டது.
விருவீடு பகுதியை சேர்ந்த நாக அர்ஜுன் என்பவர் தனியார் ATM களில் பணம் வைக்கும் ஏஜென்சி நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று நாக அர்ஜுன் வத்தலகுண்டு, பட்டிவீரன்பட்டி உள்ளிட்ட ATM களில் பணம் வைத்துவிட்டு சின்னாளபட்டிக்கு இரு சக்கர வாகனத்தில் வந்த போது புதுகோடாங்கிபட்டி அருகே 3 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து கத்தி முனையில் பணத்தை கொள்ளையடித்து சென்றது.கொள்ளையர்களை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.