ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே நெருஞ்சிப்பேட்டையில் காவிரி கதவணை மின்நிலையம் அருகே பராமரிப்பின்றி கிடக்கும் பூங்காவை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மரங்கள், அலங்கார வளைவுகள், பூக்களுடன் நந்தவனமாக காணப்பட்ட பூங்காவில் தற்போது புதர்கள் மண்டிக் கிடப்பதால், சமூக விரோத செயல்களும் நடப்பதாக கூறப்படுகிறது.