news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ரவுடி கருக்கா வினோத் ரகளை
tv

Also Watch

tv

Read this

ரவுடி கருக்கா வினோத் ரகளை

சென்னை

26

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
karkka main

சென்னை புழல் தண்டனை சிறையில் ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் 10ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள கருக்கா வினோத் சோதனையின் போது துணை ஜெயிலர் செல்வம் என்பவரை தாக்கி கீழே தள்ளிவிட்டு மிரட்டல் விடுத்து ரகளை ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

புழல் சிறையில் கருக்கா வினோத் ரகளை
சென்னை புழல் சிறையில் புழல் தண்டனை சிறையில் மட்டும் சுமார் 1,500 க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இதில் தேனாம்பேட்டை எஸ் எம் நகர் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி வினோத் என்கின்ற கருக்கா வினோத் (44) அடைக்கப்பட்டுள்ளார். இவர் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்டு நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நீதிமன்றம் அவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இதனைத் தொடர்ந்து இவர் தண்டனை கைதிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


துணை ஜெயிலர் செல்வத்தை தாக்கி கருக்கா வினோத் ரகளை

இந்த நிலையில் ரவுடி கருக்கா வினோத் தங்கி இருக்கும் அறையில் புழல் ஜெயிலர் சாந்தகுமார் மற்றும் துணை ஜெயிலர் செல்வம் மற்றும் காவலர்கள் சோதனை செய்ய முற்பட்டனர். அப்பொழுது அவர்களை சோதனை செய்யவிடாமல் தடுத்து நிறுத்திய கருக்கா வினோத் அவர்களிடம் வாக்குவாதம் செய்து ரகளையில் ஈடுபட்டதாக தெரிய வருகிறது மேலும் துணைச் செயலாளர் செல்வத்தை தருக்கா வினோத் கைகளால் கீழே தள்ளி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த துணை ஜெயிலர் செல்வத்தை அருகில் இருந்த காவலர்கள் மீட்டு புழல் சிறை வளாகத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

ரவுடி கருக்கா வினோத்திடம் விசாரணை

இதனை தொடர்ந்து இதுகுறித்து புழல் சிறைத்துறை அதிகாரிகள் சென்னை புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் வழக்கு பதிவு செய்து தற்போது புழல் காவல்துறையினர் ரவுடி கருக்கா வினோத்திடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரபல ரவுடி துணை ஜெயலரை தாக்கிய சம்பவம் புழல் சிறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்வு

2
10 mins agoshare
இன்றைய  தங்கம், வெள்ளி விலை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved