Also Watch
Read this
By: Web Team

மக்கள் அளிக்கும் மனுக்களுக்கு 30 நாட்களில் பதில் அளிக்கா விட்டால், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க நேரிடும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் இன்றைய விசாரணை துவங்கும் முன் பேசிய வழக்கறிஞர் ஒருவர், அரசுக்கு அளித்த விண்ணப்பத்தை பரிசீலிக்க உத்தரவிடக் கோரிக்கை விடுத்தார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி கே.ஸ்ரீராம், அரசுக்கு அளிக்கும் விண்ணப்பங்களை பரிசீலிக்காததால், ஏராளமான பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்படுவதாக சுட்டிக் காட்டினார்.
இதையும் படியுங்கள் : திமுக கூட்டணியில் ஓட்டையா..?- திருமாவளவன் பதில்..