போனை ஓரம் வை !! கிரவுண்டுல கால வை!! என வாசகத்துடன் சிறு வயதினிலே குழந்தைகளுக்கு விளையாட்டின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தும் விதத்தில் மாரத்தான் போட்டி உற்சாகமாக நடைபெற்றது. மாரத்தான் போட்டியினை தஞ்சை மாநகராட்சி மேயர் சன் ராமநாதன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.செல்போன் வேண்டாம் குழந்தைகளே!குழந்தைகள் செல்போன் பயன்படுத்துவதை தவிர்த்து விளையாட்டில் ஈடுபட வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தஞ்சை மிட்டவுன் ரோட்டரி சங்கம் மற்றும் லாங்மால நிறுவனத்துடன் இணைந்து தஞ்சை சத்யா விளையாட்டு அரங்கில் குழந்தைகளுக்கான மாரத்தான் போட்டிகளை நடத்தியது. 300-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர்கள் பங்கேற்புஇரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்ட போட்டிகளை மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன் டாக்டர் சிவக்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். 300-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர்கள் கலந்து கொண்ட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகள் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. Related Link 49ஆண்டுக்கு பிறகு சாதித்த அரசுப்பள்ளி