கரூர் மாவட்டம் குளித்தலையில், யோகா வகுப்புக்கு வந்த மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, பள்ளி காவலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். குளித்தலை டவுன்ஹால் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை தோறும் யோகா வகுப்புகள் நடைபெறும் என கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஞாயிறு அன்று, யோகா வகுப்புக்காக வந்த 11 வயதான பள்ளி மாணவிக்கு, அப்பள்ளியின் காவலாளியான பாலசுப்பிரமணியன் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும், வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் அந்த மாணவியை காவலாளி மிரட்டியதாகவும் புகார் கூறப்பட்டது.இதையும் படியுங்கள் : டயர் வெடித்ததால் தீப்பற்றி எரிந்த கண்டெய்னர் லாரி சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் விபத்து