சென்னையில் இருந்து புனேவிற்கு பிளாஸ்டிக் சேர்களை ஏற்றிச் சென்ற கண்டெய்னர் லாரி, கிருஷ்ணகிரி அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது திடீரென டயர் வெடித்ததால் தீப்பிடித்து எரிந்தது. பின்பக்க டயர் வெடித்து சிதறியதில், லாரியின் பின்புறத்தில் தீப்பற்றி எரிந்ததால் சாலை முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. உடனடியாக சுதாரித்துக் கொண்டு சமயோஜிதமாக செயல்பட்ட ஓட்டுநர், லாரியை சாலை ஓரமாக நிறுத்தி விட்டு உயிர் தப்பினார். தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.