திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் ஆரணி பாளையம் பகுதியில் 20 அடி உயரம் உள்ள சிலை கொண்ட ஸ்ரீ பாலமுனீஸ்வரர் ஆலயம் இருந்து வருகிறது. இந்த ஆலயத்தில் வருட வருடம் தை மாதம் பால முனிஸ்வரருக்கு பெண்கள் பொங்கலிட்டு நேர்த்தி கடன் செலுத்துவது வழக்கமாகும். பொங்கலிட்டு பெண்கள் வழிபாடுஅதேபோல் இந்த ஆண்டு பால முனீஸ்வரர் ஆலயத்தில் முனீஸ்வரருக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்று அலங்காரம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அப்பகுதி பெண்கள் பொங்கலிட்டு படையல் வைத்து வழிபட்டனர். பக்தர்களுக்கு கறிவிருந்து இந்த விழாவிற்கு வருகை தந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கறி விருந்து அளிக்கப்பட்டது. இதில் ஆரணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வந்த திரளான பக்தர்கள் முனீஸ்வரனை வழிபட்டு விருந்தை உண்டு மகிழ்ந்தனர். Related Link கிரிக்கெட் வீரர்களுக்கு உரிய வாய்ப்பு இல்லை