news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews புதிதாக திறக்கப்பட்ட பேருந்து நிலையம் குறித்து மக்கள் புகார்
tv

Also Watch

tv

Read this

புதிதாக திறக்கப்பட்ட பேருந்து நிலையம் குறித்து மக்கள் புகார்

திண்டிவனம், விழுப்புரம்

13

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
VPM Tndivanam

மக்கள் புகார் :

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சியில் கடந்த நான்காம் தேதி 27.5 கோடி செலவில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் திண்டிவனம் திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே முதலமைச்சர் மு க ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு வருகை தந்தார்.

அப்போது முதல்வர் காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார் இந்த நிலையில் பேருந்து நிலையம் திறக்கப்பட்டு நான்கு நாட்கள் ஆகியும் கழிப்பறை வசதி,தண்ணீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் முற்றிலும் இல்லை எனவும்.

 போதிய பேருந்துகள் புதிய பேருந்துக்கு வரவில்லை எனவும் அதே போல முற்றிலும் தனியார் பேருந்துகள் எதுவுமே புதிய பேருந்து நிலையத்துக்கு வரவில்லை உடனடியாக அனைத்து பேருந்துகளும் பேருந்து நிலையத்திற்கு வர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

திண்டிவனம் பேருந்து நிலையம் அருகே இரண்டு டாஸ்மாக் கடைகள் உள்ளதால் போதிய பாதுகாப்பு வசதிகள் இந்த பகுதியில் இல்லை எனவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர் அதேபோல பள்ளி மாணவர்களுக்கு போதிய பேருந்து பேருந்து நிலையத்திற்கு வராததால் பள்ளி மாணவர்கள் சரியான நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் உடனடியாக அனைத்து விதமான பேருந்துகளும் பேருந்து நிலையத்தில் இயக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Related Link
சாலையை கடக்க முயன்ற பைக், கார் மீது மோதி விபத்து

சாலையை கடக்க முயன்ற பைக், கார் மீது மோதி விபத்து


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விஜயபாஸ்கர் ஜெயிக்க வச்சா நீங்க ஜெயிக்கிறீங்க

0
2 mins agoshare
புதுக்கோட்டை சி விஜயபாஸ்கர் பிரச்சாரம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved