நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் 2024 ஆம் ஆண்டிற்கான ஆணழகன் போட்டி நடைபெற்றது. இதில் திருப்பூர், கோவை, நீலகிரி உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பங்கேற்று, தங்களது உடற்கட்டை காண்பித்து அசத்தினர். இந்தப் போட்டியில் சிறப்பு விருந்தினராக கூடலூரை சேர்ந்த மூன்றாம் வகுப்பு மாணவர் ஆஷிக் கலந்து கொண்டு மேடையில் தனது உடற்கட்டை காண்பித்து அசத்தினார்.