தனது கணவரை வயல்வெளிக்கு அழைத்துச் சென்று இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்த மனைவி. கணவரின் பிசினஸ் பார்ட்னர் உள்ளிட்ட இருவருடன் சேர்ந்து மனைவி அரங்கேற்றிய கொடூர சம்பவம். கட்டிய கணவனை மனைவியே கொலை செய்தது ஏன்? கணவரின் பிசினஸ் பார்ட்னருக்கும் கொலை செய்த பெண்ணுக்கும் என்ன சம்மந்தம்? 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த வழக்கில் தற்போது நீதிமன்றம் விதித்த தீர்ப்பு என்ன?சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போலீசார்வயல்வெளியில ஒரு ஆணோட சடலம் கிடக்குறதா போலீசுக்கு பொதுமக்கள் தகவல் குடுத்துருக்காங்க. அடுத்து, அங்க வந்த போலீசார் சடலத்தை மீட்டு போஸ்ட் மார்டத்துக்காக அனுப்பி வச்சிட்டு வயல்ல இருந்த விவசாயிகள்கிட்ட விசாரிச்சிருக்காங்க. அப்போ, ஒரு பொண்ணும் ரெண்டு ஆண்களும் தப்பி போனதாகவும் அவங்கமேல தான் சந்தேகமா இருக்குறதாகவும் சொல்லிருக்காங்க. அதுக்குப்பிறகு, வயல்வெளிக்கு வர்ற பகுதிகள்ல இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை செக் பண்ணிருக்காங்க போலீசார். அதுல, ஒரு கார் சந்தேகத்திற்கிடமா வந்துபோற காட்சி இருந்துருக்குது. அதுக்குப்பிறகு அந்த கார் எண்ணை வச்சி விசாரணையில இறங்கிருக்காங்க போலீசார். அப்போ, அது வாடகை கார்ங்குறதும், அந்த காரை ஒரு பொண்ணுதான் புக் பண்ணினாங்கனும் சொல்லிருக்காங்க காரோட ஓனர். அடுத்து, அந்த பொண்ண அடையாளம் கண்டு விசாரிச்சப்பதான் பல உண்மைகள் வெளியவந்துச்சு.முருகனின் மனைவியுடன் முத்துராஜூக்கு தகாத உறவுநெல்லை, வீரவநல்லூர் பக்கத்துல உள்ள வல்லத்து நம்பிகுளம் சர்ச் தெருவை சேர்ந்தவர் தான் முருகன். இவரு ரெட்டியார்புரம் விலக்குல ஒர்க்சாப் நடத்திட்டு இருந்துருக்காரு. தன்னைவிட அஞ்சு வயசு அதிகமான ஞான அகிலாங்குற பொண்ண 16 வருஷத்துக்கு முன்னால கல்யாணம் பண்ணிருக்காரு முருகன். இந்த தம்பதிக்கு ரெண்டு மகன்களும், ஒரு மகளும் இருக்காங்க. முருகனோட கடையில பார்டனரா இருந்துருக்காரு அதே பகுதியை சேர்ந்த முத்துராஜ். அதனால, முருகன் வீட்டுக்கு அவரு அடிக்கடி வந்துபோயிருக்காரு. அப்டி வந்துபோறப்ப முருகனோட மனைவிக்கும், முத்துராஜூக்கும் தகாத உறவு ஏற்பட்ருக்குது. மனைவியோட நடவடிக்கையில மாற்றத்தை கண்ட முருகன் அவங்கள கண்காணிக்க ஆரம்பிச்சிருக்காரு. அதுல, மனைவியோட தகாத உறவ பத்தி தெரிஞ்சிருக்கு. அதனால, ஆத்திரப்பட்ட முருகன், மனைவியை கண்டிச்சதோட முத்துராஜையும் தன்னோட வீட்டுக்கே வர வேண்டாம்னு சொல்லிருக்காரு. இந்த கண்டிப்புக்குப்பிறகு ரெண்டுபேருமே திருந்துவாங்கனு பாத்த முருகனுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சிச்சு. Related Link 20 வயது இளைஞருடன் இல்லீகல் கணவனுக்கு அதிக மதுவை ஊற்றிக் கொடுத்து அழைத்துச்சென்ற ஞானலீலாமுருகன் சொன்னத காது குடுத்து கேக்காத ஞான அகிலாவும், முத்துராஜூம் வழக்கம்போல வெளிய சுத்துறது, தனிமையில இருக்குறதுனு வெறுப்பேத்திருக்காங்க. அதப்பாத்து கடுப்பான முருகன், ரெண்டுபேரையும் கொலை செஞ்சிருவேனு மிரட்டிருக்காரு. அந்த மிரட்டலால ஆத்திரமடைஞ்ச மனைவி ஞான அகிலா கணவனோட கதைய முடிக்க திட்டம் போட்ருக்காங்க. அந்த திட்டப்படி, 2017-ம் ஆண்டு ஜனவரி 27 ஆம் தேதி கணவனுக்கு அதிக மதுவை ஊத்திக்குடுத்து போதையிலேயே வயல்வெளிக்கு அழைச்சிட்டு போயிருக்காங்க. அதுக்கு முன்னால கார் ஒண்ண புக் பண்ணி அந்த கார்லதான் கணவனை அழைச்சிட்டு போயிருக்காங்க. அந்த வயல்வெளியில ஏற்கெனவே ஞானலீலாவோட உத்தரவுப்படி தன்னோட நண்பன் பஞ்சுராஜன்கூட காத்துட்டு இருந்துருக்காரு முத்துராஜ். காரைவிட்டு இறங்குன முருகனோட தலையில ஞானலீலா, முத்துராஜ், பஞ்சுராஜன் மூணுபேரும் சேர்ந்து இரும்பு கம்பியால அடிச்சி கொலை செஞ்சிருக்காங்க. அடுத்து, சடலத்தை அங்கேயே போட்டுட்டு அங்க இருந்து தப்பி ஓடிட்டாங்க. அதுக்குப்பிறகு நடத்துன விசாரணையில ஒட்டுமொத்த உண்மையும் அம்பலமாக 3 பேரையுமே அரெஸ்ட் பண்ணிட்டாங்க காவல்துறையினர். 3 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவுபத்து வருஷத்துக்கு முன்னாடி நடந்த கொலை வழக்கு நெல்லை ஒண்ணாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்துல விசாரணையில இருந்துச்சு. இப்போ இந்த வழக்க விசாரிச்ச நீதிபதி ஞானலீலா, முத்துராஜ், பஞ்சுராஜன் 3 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிச்சி உத்தரவிட்ருக்காரு. அதுலயும் ஞான லீலாவுக்கு கூடுதலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூபாய் 15 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்ருக்குது. Related Link மகள் காதல் திருமணம் செய்ததால் ஆத்திரம்