திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் தமிழ் திரைப்பட துணை நடிகை விஷ்ணுபிரியாவின் தந்தை அவருக்கு சொந்தமான காட்டேஜில் வைத்து கொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேரில் கட்டிப் போட்டவாறு, உடல் முழுவதும் டேப் சுற்றப்பட்ட நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது கடும் குளிரிலும் வியர்க்க வைத்துள்ளது. * மாயாவி படத்தில் சிகப்பி கதாபாத்திரத்தில் நடித்த துணை நடிகை விஷ்ணுபிரியா* கடவுள் தந்த அழகிய வீடு பாடலில் மாற்றுத்திறனாளியாக நடித்து புகழ் பெற்றவர் * விஷ்ணுபிரியாவின் தந்தை சூரிய நாராயணனுக்கு நேர்ந்த கொடூரம்நடிகர் சூர்யா நடிப்பில், 2005ஆம் ஆண்டு வெளியான மாயாவி படத்தில் சிகப்பி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் துணை நடிகை விஷ்ணுபிரியா. கடவுள் தந்த அழகிய வீடு என்ற பாடலில் மாற்றுத் திறனாளியாக நடித்து புகழ் பெற்ற இவர் சில படங்களில் நடித்தாலும் மக்கள் மனதில் பரிச்சயமானவர். திருமணத்திற்கு பின் படங்களில் நடிப்பதை விட்டு விட்டார். இந்த நிலையில் இவரது தந்தை சூரிய நாராயணன் கொடைக்கானலில் வைத்து கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. * தொழிலதிபரான சூரிய நாராயணன் ஹைதராபாத்தை சேர்ந்தவர்* கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோயில் அருகே அவருக்கு காட்டேஜ் உள்ளது* கொடைக்கானல் வரும் சூரிய நாராயணன் காட்டேஜில் தங்குவது வழக்கம்ஹைதராபாத்தை சேர்ந்த தொழிலதிபரான சூரிய நாராயணனுக்கு கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோயில் அருகே சொந்தமாக காட்டேஜ் உள்ளது. அவ்வப்போது கொடைக்கானல் வரும் சூரிய நாராயணன், காட்டேஜில் சில நாட்கள் தங்குவது வழக்கம். அந்த வகையில் சில தினங்கள் முன் வந்தவர் தனது அறையில் தங்கியபடி, கணக்கு வழக்குகளை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. அதேவேளையில் கோயம்புத்துரை சேர்ந்த ஐந்து இளைஞர்கள் 2 தினங்கள் முன் சூரிய நாராயணன் காட்டேஜில் வாடகைக்கு அறை எடுத்து தங்கினர்.* கோவையை சேர்ந்த 5 பேர் காட்டேஜில் அறை எடுத்து தங்கியிருந்தனர்* சம்பவத்தன்று சூரிய நாராயணன், 2 கேர் டேக்கர்கள் மட்டும் இருந்தனர் * கேர் டேக்கர்களை கயிற்றால் தூணில் கட்டிய இளைஞர்கள் சம்பவத்தன்று, மாலை 6 மணி அளவில் பணியாளர்கள் தங்களது வேலைகளை முடித்துவிட்டு வீடு திரும்பிய நிலையில், சூரிய நாராயணன் மற்றும் இரண்டு கேர் டேக்கர்கள் மட்டும் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை நோட்டமிட்ட அந்த இளைஞர்கள் பணியாளர்களை இருவரையும் கயிற்றால் தூண் மற்றும் ஜன்னல்களில் கட்டி வைத்துவிட்டு சூரிய நாராயணனை சேரில் கட்டிப் போட்டுள்ளனர். அவரது கை மற்றும் கழுத்திலிருந்த நகைகளை கழற்ற கூறிய அந்த கும்பல், செல்போனையும் பிடுங்கி கொண்டு உடல் மற்றும் முகம் முழுவதும் டேப்பை சுற்றியுள்ளனர். இதில் அவர் மூச்சுத்திணறி உயிரிழந்த நிலையில், ரெஜிஸ்ட்டரில் இருந்த ஆவணங்களை கிழித்தெறிந்த கும்பல், சிசிடிவி, ஹார்டு டிஸ்க் உள்ளிட்டவறை திருடிக் கொண்டு தப்பியதாக கூறப்படுகிறது. * சூரிய நாராயணனை சேரில் கட்டிப் போட்டு நகைகளை கழற்றினர்* ஆவணங்கள், சிசிடிவி, ஹார்டு டிஸ்க்கை திருடிகொண்டு தப்பியோட்டம் * சூரிய நாராயணன் இறந்ததை உறுதி செய்து உடலை கைப்பற்றி விசாரணை* குற்றவாளிகள் யார் ? நகை பணத்திற்காக கொலையா? வேறு காரணமா? இதில், கேர் டேக்கர் ஒருவர் கயிறை அவிழ்த்து வெளியே சென்று கூச்சலிட்டு அப்பகுதியில் இருந்தவர்களின் செல்போனை வாங்கி கொடைக்கானல் போலீசாரை தொடர்பு கொண்டுள்ளார். அவர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சூரிய நாராயணன் இறந்ததை உறுதி செய்தனர். உடலை கைப்பற்றிய போலீசார், கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு கூறாய்விற்காக அனுப்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் தலைமையில் 50 மேற்பட்டோர் அடங்கிய சிறப்பு படை அமைக்கப்பட்டு, மோப்ப நாய் உதவியுடன் குற்றவாளிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது .கொலையாளிகள் யார் ? நகை மற்றும் பணத்திற்காக கொலையா? அல்லது வேறு காரணமா என கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. Related Link டிவி சத்தத்தால் வெடித்த தகராறு