எங்க ஊருக்கு பஸ் விட்டிங்கன்னா உங்களுக்குதான் எங்க ஓட்டு வேளாண் துறை அமைச்சரிடம் கோரசாக பள்ளி மாணவர்கள் கோரிக்கை வைத்த நிலையில் அவர்களின் கோரிக்கையை உடனடியாக செயல்படுத்துமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மகளிர் விடியல் பயண பேருந்துகள் துவக்கம்குறிஞ்சிப்பாடி அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் இரண்டு மகளிர் விடியல் பயண பேருந்து புதிதாக துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சரும், குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு மகளிர் விடியல் பயண பேருந்தினை கொடியசைத்து துவக்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.உங்களுக்கு தான் எங்க ஓட்டுஅப்பொழுது பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக பேருந்து நிலையம் வந்த பள்ளி மாணவர்கள் அமைச்சரை கண்டதும் ஓடிவந்து எங்க ஊருக்கு பஸ் விட்டிங்கன்னா உங்களுக்கு தான் எங்க ஓட்டு என மாணவர்கள் கோரசாக கோரிக்கை வைத்தனர். இதனை கண்டு நெகிழ்ச்சியடைந்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உடனே அங்கு இருந்த போக்குவரத்து அதிகாரிகளை கூப்பிட்டு மாணவர்களின் கோரிக்கையினை நாளை முதல் செயல்படுத்துங்கள் என உத்தரவு பிறபித்தார்.பள்ளி மாணவர்களால் குஷியான அமைச்சர்அதனை கேட்ட பள்ளி மாணவர்கள் அமைச்சருக்கு நன்றி தெரிவித்து கை குளுக்கினர்.இதனால் குஷியான அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வடலூர் சென்று வள்ளலார் சத்திய ஞானசபையில் சிரிது நேரம் அமர்ந்து தரிசனம் மேற்கொண்டார். பள்ளி மாணவர்களின் கோரிக்கையினை உடனடியாக நிறைவேற்றி மாணவர்களை குஷிபடுத்தி தானும் குஷியானதானதாக வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். Related Link கனிமவள கொள்ளையர்களுக்கு கடுமையான தண்டனை வழங்குக