வீட்டிற்குள் ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண். பெண்ணின் சடலத்தை பார்த்து அரண்டு போய் நின்ற உறவினர்கள். வீட்டில் தனியாக இருந்த சொந்த அக்காவை, அரிவாளால் வெட்டி சாய்த்த கொடூரம். ரத்த பந்தத்தையே கண்மூடித்தனமாக வெட்டி கொலை செய்ததற்கு என்ன காரணம்? குற்றவாளி சிக்கினானா? நடந்தது என்ன?* வீட்டிற்குள் ரத்த வெள்ளத்தில் கிடந்த சுமித்ரா* சுமித்ராவின் சடலத்தை பார்த்து அலறிய பெண்* சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணைஇரவு நேரம், அக்கா என்ன செஞ்சிட்டு இருக்காங்கன்னு பாப்போமேன்னு எதார்த்தாமா வீட்டுக்கு வந்திருக்காங்க சொந்தக்கார பெண். வாசல்ல கால் எடுத்து வச்சதுமே அக்கா, அக்கான்னு நாலஞ்சு முறை கூப்பிட்டும் உள்ள இருந்து எந்த சவுண்டுமே வரல. ஒரு வேளை கதவ தொறந்து வச்சிட்டு அக்கா வெளியே எங்கையோ போய்ட்டாங்களோன்னு சந்தேகத்தோடயே வீட்டுக்குள்ள நுழைஞ்சிருக்காங்க. அப்பதான், வீட்டுக்குள்ள சுமித்ரா, ரத்த வெள்ளத்துல சடலமா கிடந்தத பாத்து அரண்டு போய் நின்னுருக்காங்க. தகவல் தெரிஞ்சு சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ்காரங்க, சுமித்ரா சடலத்த கைப்பற்றி போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வச்சிட்டு விசாரணையில இறங்குனாங்க. சுமித்ராவுக்கு என்னாச்சு? அவங்கள யாரு இப்படி பண்ணதுன்னு தோண்டி துருவ ஆரம்பிச்சாங்க. அப்ப, சமீப காலமா சுமித்ராவுக்கும் அவங்களோட தம்பி முத்துராஜாவுக்கும் இடையில தான் அடிக்கடி தகராறு நடந்துட்டே இருந்துச்சுன்னு சொல்லிருக்காங்க. அதுக்கப்புறம், சுமித்ராவோட தம்பிய பிடிச்சு விசாரிச்சப்ப தான் போலீஸுக்கு பல திடுக்கிடும் உண்மைகளாம் தெரியவந்திருக்கு. * தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த சுமித்ரா* சுமித்ராவுக்கு பல ஆண்களுடன் ஏற்பட்ட பழக்கம்* மணிக்கணக்கில் செல்போனில் பேசிய சுமித்ராதூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டத்துல உள்ள புளியங்குளம் இந்திரா காலனிய சேர்ந்த சுமித்ரா, தனியார் நிறுவனத்துல ஹெல்பரா வேலை பாத்துட்டு இருந்துருக்காங்க. இவங்களுக்கு ரெண்டு மகள்கள் இருக்காங்க. ரெண்டு பேருமே ஹாஸ்டல்ல தங்கி படிச்சிட்டு வர்றாங்க. 35 வயசான சுமித்ராவு வேலைக்கு போறப்ப, அங்க கூட வேலை செய்ற ஒருத்தர் கூட பழக்கம் ஏற்பட்டதா சொல்லப்படுது. இந்த பழக்கம் நாளடைவில எல்லைமீறி போனதாவும், கடந்த சில மாசமாவே, அந்த நபர் கூட சுமித்ரா மணிக்கணக்குல ஃபோன் பேசிட்டே இருந்ததாவும் சொல்லப்படுது. வேலை பாக்க போன இடத்துல மட்டுமில்லாம, அங்க இங்கன்னு ரெண்டு பேரும் தனியா நின்னு பேசிட்டு இருந்ததா, ஊர் மக்கள் சிலர், முத்துராஜாகிட்ட சொல்லி இருக்காங்க. * சுமித்ராவின் நடவடிக்கைகளை பார்த்து தம்பி முத்துராஜா ஆத்திரம்* வேலைக்கு செல்லக்கூடாது என கண்டிசன் போட்ட முத்துராஜா* சுமித்ரா - முத்துராஜா இடையே அடிக்கடி ஏற்பட்ட தகராறுவீட்டுல எந்த நேரமும் ஃபோனும் கையுமாவே இருந்த அக்கா சுமித்ராவோட நடவடிக்கைய பாத்து, தம்பி முத்துராஜா, சுமித்ரா கிட்ட சண்ட போட்டிருக்கார். ரெண்டு பொம்பள பசங்க இருக்காங்க, இந்த வயசுல இப்படி எந்நேரமும் ஃபோன் பேசிட்டே இருந்தா எப்படி, ஊர்ல உள்ளவங்க என்ன சொல்லுவாங்க, இனிமே நீ வேலைக்கே போகக் கூடாது, வீட்டுல இருந்தா போதும்னு முத்துராஜா, கறாரா சொல்லியிருக்காரு. இவ்வளவு பிரச்சினைக்கு அப்புறமும் சுமித்ரா, செல்போன் பேச்ச நிறுத்திக்கவே இல்ல. கடந்த சில நாட்களுக்கு முன்னாடி, முத்துராஜாவுக்கும், அக்கா சுமித்ராவுக்கும் இடையில தகராறு ஏற்பட்டிருக்கு. செல்போன தொடவே கூடாதுன்னு முத்துராஜா சொல்ல, பதிலுக்கு சுமித்ரா மல்லுக்கட்டன்னு பிரளயமே வெடிச்சிருக்கு. * அக்கா சுமித்ராவால் அவமானம் எனக் கருதிய முத்துராஜா* முத்துராஜா பலமுறை எச்சரித்தும் சுமித்ரா அலட்சியம் * சுமித்ராவை கொ* செய்ய திட்டம் போட்ட முத்துராஜாசுமித்ராவுக்கு பல ஆண்களோட பழக்கம் இருக்குறதால, கிராமத்துல உள்ளவங்க எல்லாரும் அவங்க குடும்பத்த பத்தி தவறா பேசிருக்காங்க. முத்துராஜா வெளியே போனாலும், அவங்க அக்கா பண்றத பத்தி சொல்லி அவர கிண்டல் பண்ணதா சொல்லப்படுது. இது, முத்துராஜாவுக்கு உச்சகட்ட ஆத்திரத்த ஏற்படுத்திருக்குது. ஆரம்பத்துல இப்படிலாம் பண்ணாதன்னு சொல்லியும் சுமித்ரா கண்டுக்காம இருந்துருக்காங்க. பலமுறை பொறுமையா எடுத்து சொல்லியும் சுமித்ரா, அத காதுல வாங்காம இஷ்டத்துக்கு இருந்துருக்காங்க. இதுக்கு மேலயும், சுமித்ரா உயிரோட இருந்தா குடும்பத்தோட மானத்த குழிதோண்டி புதைச்சிருவான்னு நினைச்ச முத்துராஜா, அக்கான்னு கூட பாக்காம அவங்கள கொலை செய்ய திட்டம் போட்டுருக்கான். * சுமித்ராவை அரிவாளால் வெட்டி கொ*ற முத்துராஜா* முத்துராஜாவை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார்சம்பவத்தனைக்கு, தன்னோட அக்கா வீட்டுக்கு ஃபிரண்ட்ஸோட போன முத்துராஜா, வீட்டுல தனியா இருந்த சுமித்ராவ ஆத்திரம் தீரும் வரைக்கும், அரிவாளால கண்மூடித்தனமா வெட்டி போட்டுட்டு அங்க இருந்து எஸ்கேப் ஆகிருக்கான். இதுல, சம்பவ இடத்துலேயே சுருண்டு விழுந்த சுமித்ரா, துடிதுடிச்சு உயிரிழந்துட்டாங்க. முழு விசாரணைக்கு அப்புறம், சொந்த அக்காவ கொலை செஞ்ச முத்து ராஜாவையும், கொலைக்கு உடந்தையா இருந்த அவனோட ஃபிரண்ட்ஸ் ரெண்டு பேரையும் போலீஸ் அரெஸ்ட் பண்ணி ஜெயில்ல அடச்சிருக்காங்க. Related Link குடும்ப பகையால் சிறுவனுக்கு கொடூரம், வெளியான மர்ம முடிச்சுகள்