வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் எந்த அடிப்படை வசதிகளும் இல்லை என நோயாளிகள் வேதனை தெரிவித்துள்ளனர். குறிப்பாக நோயாளிகளை அழைத்து செல்ல ஸ்ட்ரெச்சர் இல்லாததால் உடன் வந்த உறவினர்கள் இரண்டு பேர் கையில் தூக்கி சென்ற நிலை நீடித்து வருகிறது.