Also Watch
Read this
By: Web Team

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே காண்டூர் கால்வாயில் தவறி விழுந்து பலியான யானையின் உடலை மீட்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர்.
திருமூர்த்தி அணையின் முக்கிய நீர் ஆதாரமான காண்டூர் கால்வாயில் உயிரிழந்த யானையின் உடல் மிதந்து செல்வதாக வனத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற வனத்துறையினர், தண்ணீரில் மிதந்து கொண்டிருந்த யானையின் உடலை ஜேசிபி மூலம் மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.