திருவள்ளூர் அரசு உதவி பெறும் பள்ளியில் நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாக பன்னிரண்டாம் வகுப்பு துணைத் தேர்வு எழுத முடியாமல் மகன் பாதிப்படைந்ததாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். நெய்வேலி பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார் என்ற மாணவன் 12ஆம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்த நிலையில், துணை தேர்வில் பங்கேற்று தேர்வு எழுத தேர்வுக்கான கட்டணத்தை கட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வரவில்லை என பள்ளி நிர்வாகத்தினர் அலட்சியத்துடன் தெரிவித்ததாக கூறிய பெற்றோர் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர்.இதையும் படியுங்கள் : தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்த விவசாயி கைது... கஞ்சா செடிகளை வேரோடு பிடுங்கி அழித்த போலீசார்