news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நீதிமன்ற உத்தரவின் பேரில் சுடுகாட்டின் சுற்றுச்சுவர் இடிப்பு
tv

Also Watch

tv

Read this

நீதிமன்ற உத்தரவின் பேரில் சுடுகாட்டின் சுற்றுச்சுவர் இடிப்பு

வெங்கட்டம்பட்டி, தருமபுரி

14

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Dharmapuri court

சுற்றுச்சுவர் இடிப்பு :

தருமபுரி மாவட்டம் வெங்கட்டம்பட்டி அருகே மாதேமங்கலம் கிராமத்தில் சுமார் 1000 கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு சுற்றுசுவர் கொண்ட சுடுகாடு உள்ளது.

சுடுகாட்டின் அருகே அதே கிராமத்தைச் சேர்ந்த குட்டியப்பன் என்பவரின் மகன் மாதையன் (60) என்பவருக்கு சொந்தமான நிலத்தின் அருகே சுடுகாட்டின் சுற்றுச்சுவர் இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து வந்த நிலையில் சுற்றுச்சுவரை இடித்து தரும்படி உத்தரவு வந்துள்ளது.

உத்தரவுபடி நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் வெங்கடம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் சம்பவ இடத்திற்கு சென்று சுற்றுசுவரை ஜேசிபி இயந்திரம் கொண்டு இடித்துள்ளனர்.

ஆனால் சுடுகாட்டின் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கொண்டு சுடுகாட்டின் சுற்றுச்சுவரை இடித்து விட்டதாகவும் மாதேமங்கலம் கிராமத்தில் வசிக்கும் பொதுமக்களிடம் யாரிடமும் அறிவிக்காமல் சுற்று சுவரை இடித்ததை கண்டித்து மிட்டாரெட்டி அள்ளி - தருமபுரி செல்லும் சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து வந்த அதியமான் கோட்டை காவல்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தொடர்ந்து உரிய விசாரணை மேற்கொண்டு சுற்றுசுவர் கட்டி கொடுக்கப்படும் என உத்தரவாதம் அளித்தனர்.

தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டனர். இந்த சாலை மறியலால் தருமபுரி வெங்கடம்பட்டி, குட்டூர், தம்மனம்பட்டி, ஏரிகோடிபட்டி, தின்னப்பட்டி, மிட்டாரெட்டி அள்ளி, கோம்பை, உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் செல்ல முடியாமல் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Link
காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்

காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திட்டம் எங்களோடது, விளம்பரம் தேடுறது திமுக - இபிஎஸ் விமர்சனம்

5
17 mins agoshare
திருச்சியில் இபிஎஸ் பேச்சுbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved