சாதனை முயற்சி : தஞ்சாவூரில் மரம் வளர்ப்போம் பூமியை காப்பாற்றுவோம் என்ற உறுதி மொழியுடன் 300க்கும் மேற்பட்ட சிலம்ப வீரர்கள் மற்றும் கராத்தே வீரர்கள் இணைந்து பல்வேறு மரக்கன்றுகளை தங்களது ஒரு கைகளில் வைத்துக்கொண்டு தொடர்ந்து 33 நிமிடம் சிலம்பம் சுற்றியும், கராத்தே செய்தும் சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்.வீட்டுக்கு ஒரு மரக்கன்று வளர்ப்போம், இயற்கையை பாதுகாப்போம் என்ற விழிப்புணர்வுக்காக நடத்தப்பட்ட இந்த சாதனை நிகழ்ச்சியில் பெற்றோர்களும் விளையாட்டு வீரர்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். Related Link மதுபாட்டில்களை தெருவில் வீசிய பொதுமக்கள்