Also Watch
Read this
By: Manigandan Raja
சென்னை, மகளிர் கிறிஸ்தவக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாணவிகளுக்கு, நடிகர் ரஜினிகாந்த் வசனத்தைச் சொல்லி முதல்வர் ஸ்டாலின் மேற்கோள் காட்டினார்.

நடிகர் ரஜினிகாந்த்தின் படையப்பா படத்தில் இடம்பெற்ற, ‘கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது, கஷ்டப்படாம கிடைக்கிறது எதுவும் நிலைக்காது’ என்ற வசனத்தை மாணவிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கோள் காட்டினார்.

முதல்வருக்கு பாராட்டு விழா
சென்னை, நுங்கம்பாக்கம், கல்லூரி சாலை, கிறிஸ்தவ மகளிர் கல்லூரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று பிப்ரவரி 10ஆம் தேதி பாராட்டு விழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது;

எம்சிசி பள்ளியின் பழைய மாணவனாக, நான் மகளிர் கிறிஸ்தவக் கல்லூரிக்கு வந்திருக்கிறேன், நமக்குள் நன்றி சொல்லிக் கொள்ள தேவையில்லை. என்னைப் பொறுத்தவரை பெண்கள் என்றாலே அழகு. அப்படிப்பட்ட பெண்களுக்கு அறிவு தான் உண்மையான அழகு. படிப்பு தான் ஒரு பெண்ணுக்கு உலகிலேயே அழகான அணிகலன். வெற்றிக்கு குறுக்கு வழி கிடையாது. கடினமாக உழைத்தால்தான் ஜெயிக்க முடியும்.

ரஜினிகாந்த் வசனம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டயலாக் ஒன்று வரும். ”கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது, கஷ்டப்படாம கிடைக்கிறது எதுவும் நிலைக்காது”
தமிழ்நாட்டில் கல்விக்காக நாம் கொண்டுவந்த புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் மாணவிகள் பயனடைந்து வருவதைக் கண்டு பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்தத் திட்டத்தின் கீழ் பெண்கள் உயர் கல்வியில் சேருவது 34% உயர்ந்துள்ளது.

புதுமைப் பெண்கள் திட்டத்தால் நகர்ப்புற மாணவிகளைக் காட்டிலும் கிராமப்புற மாணவிகள் அதிகம் பயனடைந்துள்ளனர். டிகிரியோடு நிறுத்தாமல் ஆராய்ச்சி படிப்பு வரை பெண்கள் படிக்க வேண்டும். புதுமைப்பெண் திட்டம் தொடர்பான ஆய்வின் முடிவைப் பார்த்து, நான் அடைந்த மகிழ்ச்சியை விவரிக்க முடியாது.
இவ்வாறு முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved