திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் கருகியதாக செய்தி வெளியான நிலையில் வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். திருத்துறைப்பூண்டி, ஆலங்காடு, உப்பூர், எடையூர், குண்டலூர், எக்கல், கீழப்பெருமனை உள்ளிட்ட பகுதிகளில் ஆங்காங்கே சம்பா நெற்பயிர்கள் கருகி விவசாயிகள் வேதனையடைந்தனர். இந்நிலையில் பயிர்கள் கருகுவதற்கான காரணம் குறித்து கண்டறிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.இதையும் படியுங்கள் : அரசுப் பேருந்து கவிழ்ந்த விபத்தில் எட்டு பேர் காயம்