news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அடுத்தடுத்த மூன்று வீடுகளில் திருட்டு
tv

Also Watch

tv

Read this

அடுத்தடுத்த மூன்று வீடுகளில் திருட்டு

திருப்பூர்

22

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
theft main

பல்லடம் சித்தம்பலம் என்ற பகுதியில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு ஜெகதா என்ற ஆசிரியை வீட்டில் 18 பவுன் தங்க நகை மற்றும் அடுத்தடுத்த மூன்று வீடுகளில் திருட்டு சம்பவம் நடைபெற்றது.


சிசிடிவி மூலம் சிக்கிய திருடர்கள்

அதனைத் தொடர்ந்து சிசிடிவி கேமராக்களை திருட வந்தவர்கள் மூடி வைத்துவிட்டு திருடி சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது, இந்நிலையில் 100 என்ற அவசர காவல் எண்ணிற்கு தொடர்பு கொண்டதை தொடர்ந்து போலீசார் திருட்டு சம்பவத்தை தீவிர விசாரணையை முன்னெடுத்தனர்.

3 நாளில் தட்டித் தூக்கிய போலீஸ்

இந்நிலையில் மூன்றே நாளில் குற்றவாளிகளை பிடித்து 15 பவுன் தங்க நகை மற்றும் 50,000 ரூபாய் பறிமுதல் செய்து இருவரை தற்போது கைது செய்துள்ளனர். மேலும் ஒருவரை வலை வீசி தேடி வருகின்றனர்.

கோவை மத்திய சிறையில் அடைப்பு

பிடிப்பட்டவர்களில் ஒருவர் தேனி பகுதியை சேர்ந்த பிரவீன் குமார் என்றும் மற்றொருவர் கோவை பகுதியை சேர்ந்த முருகன் என்பது தெரியவ்ந்துள்ளது. இருவரையும் விசாரணைக்கு பின் போலீசார் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறைக்கு அனுப்பி வைத்தனர்.



முக அடையாளத்தை கொண்டு மடக்கிய போலீஸ்

இருவர் மீதும் பல்வேறு வழக்குகள் கொள்ளை கொலை சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் என்பதும் திருடப்படும் இடத்தில் சிசிடிவி காட்சிகளை மறைத்தாலும் இவர்கள் வேறு பகுதிக்கு செல்லும் போது அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் முகத்தை அடையாளம் வைத்து போலீசார் மடக்கிப் பிடித்ததுள்ளதாக தெரிவித்தனர்.


பொதுமக்கள் நன்றி தெரிவித்து பாராட்டு

இந்நிலையில் மூன்றே நாளில் குற்றவாளிகளை பிடித்து நகையை மீட்ட பல்லடம் ஆய்வாளர் மாதையன் மற்றும் ஜெயதேவி ஆகியோர் உள்ளிட்ட தனிப்படை போலீஸாருக்கு இப் பகுதியைச் சேர்ந்த பகுதி பொதுமக்கள் ஒன்றிணைந்து பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்தனர்.


வெளியூர் செல்லும்போது பணத்தை பீரோவில் வைக்காதீர்

இந்நிலையில் பல்லடம் காவல் ஆய்வாளர் வெளியூர் செல்லும் பொது மக்கள் தயவுசெய்து பீரோக்களில் பணத்தை வைக்காமல் மூட்டை கட்டி ஏதாவது ஒரு மூலையில் போட்டு விட்டு சென்றாலே திருடர்களால் கண்டுபிடிக்க முடியாது என்றும் மேலும் சிசிடிவி காட்சிகளால் மட்டுமே எங்களால் இவ்வளவு விரைவாக பிடிக்க முடிந்தது ஆகவே அனைவரும் சிசிடிவி அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்களிடன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Link
தலைவர்களுக்கு அழைப்பு விடுத்த சச்சின் டெண்டுல்கர்

தலைவர்களுக்கு அழைப்பு விடுத்த சச்சின் டெண்டுல்கர்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தவெக நிர்வாகிகள் கூட்டம் - விஜய் உரை

12
7 mins agoshare
தவெக தலைவர் விஜய் உரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved