Also Watch
Read this
By: Web Team

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே காவிரி ஆற்றில் குளித்தபோது மூழ்கிய நபர், மாயனூர் கதவணையின் ஷட்டர் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்த குகன், இரண்டு நாட்களுக்கு முன்பு ஸ்ரீராமசமுத்திரத்தில் உள்ள நண்பரின் வீட்டு நிகழ்ச்சிக்காக வந்து, காவிரி ஆற்றில் குளிக்க சென்றார்.
அவரின் செல்போன் மற்றும் காலணி கரையோரம் கிடந்ததையடுத்து உறவினர்கள் அவரை தேடிய நிலையில், சடலம் கிடைத்தது.
இதுகுறித்து காட்டுபுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.