Also Watch
Read this
By: Web Team

ஆயிரம் நபர்களில் 150 முதல் 200 பேர், வாய் புற்று நோயால் பாதிக்கப்படுவதாக சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையின் இயக்குநர் பார்த்தசாரதி தெரிவித்தார்.
மருத்துவமனையில் இன்று முதல் மூன்று நாட்கள் நடைபெறவுள்ள, வாய் புற்று நோய் முகாமை துவக்கி வைத்த பிறகு செய்தியாளரிடம் பேசிய பார்த்தசாரதி, அதிநவீன பரிசோதனை கருவி மூலம், புற்று நோய் அறிகுறி உள்ளதா என கண்டறிய முடியும் என தெரிவித்தார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நோய் பாதிப்பு குறித்து அறியலாம் என்றும், எந்த நிலையில் பாதிப்பு உள்ளது என்பதை கண்டறிந்து முன்கூட்டியே சிகிச்சை அளிக்க முடியும் என பார்த்தசாரதி தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved