news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அக்னி வீரபத்திரன் கோயில் மாசிக்களரி விழா கோலாகலம்
tv

Also Watch

tv

Read this

அக்னி வீரபத்திரன் கோயில் மாசிக்களரி விழா கோலாகலம்

புதுக்கோட்டை, இராமநாதபுரம்

12

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
RMD

மாசிக்களரி விழா கோலாகலம் :

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள புதுக்கோட்டை கிராமத்தில் உள்ள அக்னி வீரபத்திரன் கோவில் மாசிக்களரி விழாவை முன்னிட்டு 500 மேற்பட்டோர் கலந்து கொண்ட பால்குட ஊர்வலம் நடைபெற்றது.

பெண்கள் பால்குடம் ஏந்தியும், சிறுவர்கள் மயில் காவடி எடுத்தும், ஏராளமானோர் 16 அடி வேல் குத்தியும், நடக்க முடியாத மாற்றுத்திறனாளி ஒருவர் வேல் குத்தி தனது இரு சக்கர வாகனத்தில் அமர்ந்தபடி ஊர்வலத்தில் பங்கேற்றது பொதுமக்களை ஆச்சரியப்பட வைத்தது.

புதுக்கோட்டை கிராம பிள்ளையார் கோவிலில் இருந்து டோல் மேளம், சிப்லா மேளம், ஜெண்டை மேளம், தாரை தப்பட்டை உள்ளிட்ட சகல வாத்தியங்களோடு ஊர்வலமாக வந்த பால்குடம் கிராம வீதிகளில் வலம் வந்து அக்னி வீரபத்திரன் சுவாமி கோவிலை அடைந்தது.

பின்னர் அக்னி பத்திர சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்குபால் அபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Link
தெற்கு ரயில்வேயை கண்டித்து நாகையில் கடையடைப்பு

தெற்கு ரயில்வேயை கண்டித்து நாகையில் கடையடைப்பு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழக வாசல் வரை வந்துவிட்ட பேராபத்து - முதல்வர் எச்சரிக்கை

7
20 mins agoshare
முதல்வர் எச்சரிக்கைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved