சிம்மம் திருக்கஞித சித்தாந்தபடி உங்களுக்கு அஷ்டம சனி நடைபெற்றாலும் , அதாவது எட்டாம் வீட்டில் சனி சஞ்சரிப்பதால் உங்களுக்கு அஷ்டம சனி நடைபெறுவது சாதக மற்ற அமைப்பு என்தாலும், ஆண்டுக்கோல் வருடக்கோல் என வர்ணிக்கப்படக்கூடிய குருபகவான் 14.5.2025 க்கு பிறகு உங்கள் ராசிக்கு லாபஸ் தாணமான 11ம் வீட்டில் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பு ஆகும்.குருபகவான் லாபஸ் தாணத்தில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் பணம் வரவுகள் மிக மிக நன்றாக இருக்கும். எடுத்த காரியத்தைக் குறித்த நேரத்தில் செய்து முடிக்கக்கூடிய ஒரு வாய்ப்புகள் உண்டு.தொழில் வியாபாரத்தில் நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய ஒரு அதிஷ்டமானது உங்களுக்கு இருக்கும். உங்கள் உழைப்புக்கான பலனை அடையக்கூடிய ஒரு அதிஷ்டமானது உங்களுக்கு உண்டு. உத்யோக ரிதியாக நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.ஒரு பெரிய மனிதருடைய ஆதரவானது உங்களுக்கு கிடைப்பதால் மன மகிழ்ச்சி ஏற்படக்கூடிய ஒரு வாய்ப்புகள் உண்டு. உத்யோகத்தில் எடுத்த பணியைக் குறித்த நேரத்தில் செய்து முடிக்கக்கூடிய ஒரு அதிஷ்டமானது உங்களுக்கு உண்டு. இந்த 2025-2026 தமிழ் புத்தாண்டில் உங்களுக்கு அஷ்டம சனி நடப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும்.தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது மிக நல்லது. 18.05.2025 முதல் ஜென்மராசியில் கேது ஏழாம் வீட்டில் ராகுபகவான் சஞ்சாரம் செய்வது உங்களுக்கு சத்ரு சாதக மற்ற அமைப்பு என்பதால் எதிலும் உணர்ச்சி வசப்படாமல் இருப்பது நிஜமிக நல்லது. முன் கோபத்தை சற்று குறைத்துக்கொள்ள வேண்டும். கணவன் மனைவி இடையே விட்டுக் கொடுத்துச் செல்வது மிக மிக நல்லது. உடனிருப்பவரை அனுசரித்துச் செல்வதன் மூலமாக ஒரு வளமான பலன்களை அடையக்கூடிய ஒரு வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. குருப்பார்வை உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் இருப்பதால் குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடக் கூடிய ஒரு யோகமானது உண்டு.நீண்ட நாட்களாக குழந்தைப் பாக்கியம் இல்லை என்று ஏங்கியவருக்கு வரும் நாட்களில் ஒரு நல்ல நிலை ஏற்படக்கூடிய அமைப்புகளும் மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி கிடைக்கக்கூடிய ஒரு யோகங்களும் உண்டு. பூர்விகச் சொத்துவகையில் அனுகலமான பலன்களை அடையக்கூடிய ஒரு வாய்ப்புகள் உண்டு. உங்கள் செயல்களுக்கு அனுகலமான பலங்கள் இருக்கும் என்றாலும் சில விஷயங்கள் சற்று தாமதமாக நடக்கக்கூடிய ஒரு நிலையானது இருக்கிறது.உங்களுக்கு அஷ்டம சனி நடப்பதால் சனி பகவானுக்கு தொடர்ந்து வழிபாடு செய்வது, ஆஞ்சநேயர் வழிபாடு மேற்கொள்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது, அம்மன் வழிபாடு மேற்கொள்வதன் மூலமாக ஒரு வளமான பலன்களை அடைக்குடிய ஒரு வாய்ப்பானது வரும் தமிழ் புத்தாண்டில் உங்களுக்கு ஏற்படும்.