Also Watch
Read this
By: Web Team

நியூயார்க் நகர மேயர் முதற்கட்ட தேர்தலில் வெற்றி பெற்றுள்ள இந்திய வம்சாவளியினரும், ஜனநாயக கட்சியை சேர்ந்தவருமான சோஹ்ரன் மம்தானியை 100 சதவிகிதம் வெறி பிடித்த கம்யூனிஸ்ட் என அதிபர் டிரம்ப் கடுமையாக தாக்கி உள்ளார்.
தமது ட்ரூத் சமூக வலைதளத்தில் வெறுப்பை கொட்டியுள்ள டிரம்ப், மம்தானியை பார்க்கவே அருவெறுப்பாக இருப்பதாகவும், எந்த திறமையும் இல்லாதவர் எனவும் டம்மி பீசுகளே அவரை ஆதரிப்பதாகவும் டிரம்ப் தாறுமாறாக திட்டி பதிவிட்டுள்ளார்.
33 வயதான சோஹ்ரன் ம மதானி இந்திய-அமெரிக்க சினிமா இயக்குநர் மீரா நாயரின் மகனாவார்.
தம்மை ஒரு சோசலிஸ்ட் என கூறி வரும் அவருக்கு நியூயார்க் மேயர் தேர்தலில் ஜனநாயக கட்சி முழு ஆதரவு தெரிவித்துள்ளது.. வெற்றி பெற்றால் அவர் நியூயார்க்கின் முதல் முஸ்லீம் மேயராக பதவி வகிப்பார்.
இதையும் படியுங்கள் : தமிழகத்திற்கு ஜூலை மாதத்திற்கான 31.24 TMC தண்ணீர்..
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved