Also Watch
Read this
Posted on: May 02, 2025 11:13 AM
By: Srini Vasan

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து வரும் இந்தியா, அந்த நடவடிக்கைகளை போருக்கு வழிவகுக்காத வண்ணம் கவனமாக கையாளும் என அமெரிக்கா நம்புவதாக துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகளை பிடிப்பதற்கு இந்தியாவுக்கு, பாகிஸ்தான் முழுமையாக ஒத்துழைக்கும் எனவும் கூறினார்.
தனது இந்திய சுற்றுப்பயணத்தின் போது நிகழ்த்தப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக ஃபாக்ஸ் நியூஸ் நேர்காணலில் பேசிய ஜே.டி.வான்ஸ், இவ்வாறு தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved