அரசு நிர்ணயித்த நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் வரை ஹார்வர்டு பல்கலைக்கழகத்திற்கு ஆராய்ச்சி மானியங்கள் கிடையாது என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. அதிபராக பொறுப்பேற்ற நாளில் இருந்தே பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் டிரம்ப் உலக புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் சேர்க்கை முழுக்க முழுக்க தகுதியின் அடிப்படையில் இருக்கவேண்டும் உள்ளிட்ட பல நிபந்தனைகளை விதித்தார். இதனை பல்கலைக்கழக நிர்வாகம் ஏற்க மறுத்ததால், கோபம் அடைந்த டிரம்ப், பல்கலைகழகத்திற்கான 18 ஆயிரத்து 500 கோடி மானியத்தை நிறுத்தினார். இந்நிலையில் தற்போது வரி விலக்கு அந்தஸ்தைப் பறிக்கவும் டிரம்ப் அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது.