ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உணவகம் அருகே நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் காயம் அடைந்தனர். நகரின் பரபரப்பான சாலையில் நடத்தப்பட்ட இந்த துப்பாக்கி சூட்டில், சாலையை கடந்து செல்லும் கார்கள் மற்றும் போலீசாரை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. அப்பகுதியை சுற்றி வளைத்த போலீசார், 60 வயதுடைய நபரை கைது செய்து அவரிடமிருந்து இரண்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர். சுமார் நூறு தோட்டாக்களால் சுடப்பட்டதில் அப்பகுதி முழுவதும் தீப்பொறிகள், புகை என திரைப்படத்தை மிஞ்சம் அளவு இருந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினார்.