கனடாவில் காட்டுத் தீ ஏற்படுவதற்கான சீசன் தொடங்கியுள்ளது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயை அணைக்கும் பணியில் சிறிய ரக விமானங்கள் ஈடுபட்டன. காட்டு தீ காரணமாக வானுயரத்திற்கு கரும்புகை எழுந்த நிலையில், ஏராளமான மரங்கள் தீயில் கருகி சேதமடைந்தன.