Also Watch
Read this
By: Web Team

ஆபரேஷன் சிந்து மூலம் ஈரானில் இருந்து பத்திரமாக தாயகம் திரும்பிய இந்தியர்கள், உணர்ச்சி வசப்பட்டு வந்தே மாதரம், பாரத் மாதா கி ஜே என முழக்கம் எழுப்பி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இஸ்ரேல் - ஈரான் இடையேயான மோதலால், மத்திய கிழக்கில் போர் பதற்றம் நீடித்து வருகிறது. எனவே, ஈரானில் தங்கி கல்வி பயின்று வரும் இந்திய மாணவர்களை மீட்க மத்திய அரசு ஆபரேஷன் சிந்து நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
இதன் முதல்கட்டமாக ஈரானில் இருந்து 110 மாணவர்கள் கடந்த இரு தினங்களுக்கு முன்பு டெல்லிக்கு வந்தடைந்தனர்.
இந்த சூழலில், 2-ஆவது கட்டமாக தற்போது 290 இந்தியர்கள், சிறப்பு விமானம் மூலம் நள்ளிரவு 12.30 மணிக்கு டெல்லியை வந்தடைந்தனர்.