Also Watch
Read this
By: Web Team

தமிழக அரசு சார்பில் விரைவில் தொடங்கப்படவிருக்கும் தூய்மை_Mission திட்டத்தில், அனைத்துத் துறைகளுடன் இணைந்து செயல்பட்டு சாதனை படைப்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
ஒரு நகரின் தூய்மை என்பதில் அரசுக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கும் எவ்வளவு பொறுப்பு உள்ளதோ, அதே அளவு பொறுப்பு பொதுமக்களுக்கும் உள்ளது என்று கூறியுள்ள அவர், யாரோ அள்ளுகிறார்கள், யாரோ தரம் பிரிக்கிறார்கள் என்று மானாவாரியாக பிளாஸ்டிக் குப்பையை வீசினால், அது மீண்டும் நம்மையே ஏதோ ஒரு வழியில் வந்தடையும் என தெரிவித்துள்ளார்
. வளர்ந்த நாடுகளுக்கு இணையாக தூய்மையான சுற்றுப்புறங்களைப் பெறவேண்டுமென்றால், குப்பைகளைத் தரம் பிரித்து அதற்குரிய இடத்தில் போடும் குறைந்தபட்ச நாகரிகப் பண்பு இன்றியமையாதது என்றும் கூறியுள்ளார்.