Also Watch
Read this
By: Web Team

தமிழகத்தில் புதன்கிழமையன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதே தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் புதன்கிழமையன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக, திருவண்ணாமலை,ராணிப்பேட்டை, வேலூர்,திருப்பத்தூர்,விழுப்புரம்,செங்கல்பட்டு,காஞ்சிபுரம், கடலூர், அரியலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
13 ஆம் தேதி தொடங்கி 15 ஆம் தேதி வரை கோவை மாவட்டத்தில் மிக கனமழை பெய்யும் என்றும், 15 ஆம் தேதியன்று கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கும் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
13 ஆம் தேதியன்று நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்ய தொடங்கி 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் அதிகனமழையாக மாறக்கூடும் என்பதால் அங்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.