Also Watch
Read this
பிரச்சனையில் இடிக்கப்பட்ட காளியம்மன் கோவில்.. கோவில் இடிக்கப்பட்டு எடுத்துச் செல்லப்பட்ட சிலை.. இருசமூகத்தினரிடையே அமைதி பேச்சுவார்த்தை - உடன்பாடு..
இருசமூகத்தினர் இடையே ஏற்பட்ட பிரச்சனை
Updated: Aug 30, 2024 09:55 AM
கேவிகுப்பம் அருகே இரு சமூகத்தினற்கிடையே ஏற்பட்ட பிரச்சனையில் இடிக்கப்பட்ட
கற்சிலை-
அரசு அதிகாரிகள் முன்னிலையில் மீண்டும் அதே கோவிலில் காளியம்மன் கற்சிலை
பிரதிஷ்டை*
வேலூர்மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த கெம்மங்குப்பத்தில் உள்ள காளியம்மன்
கோவிலில் வழிபாடு நடத்துவது தொடர்பாக இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட
பிரச்சனையில் ஒரு தரப்பினரால் கடந்த 6-ம் தேதி கோவில் இடிக்கப்பட்டு உள்ளே
இருந்த காளியம்மன் சிலை எடுத்து செல்லப்பட்டது.
இது தொடர்பாக குடியாத்தம் கோட்டாட்சியர் சுபலட்சுமி தலைமையில் நடைபெற்ற அமைதி
குழு பேச்சு வார்த்தையில் ஏழு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு சிலையை மீண்டும்
வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது.
இதனை அடுத்து நேற்று கே வி குப்பம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சிலை
ஒப்படைக்கப்பட்ட நிலையில் இன்று இடிக்கப்பட்ட கோவிலில் மீண்டும் காளியம்மன்
கற்சிலை
கே வி குப்பம் வட்டாட்சியர் சந்தோஷ் தலைமையிலான அறநிலை துறை அதிகாரிகள்
அடங்கிய ஏழு பேர் கொண்ட குழுவினர் முன்னிலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டு யோக
கலசங்கள் அமைத்து மந்திரங்கள் ஓதப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டது
அழகான, பொலிவான சருமத்தை பெற என்ன செய்யலாம்?
காட்டு தீ காரணமாக காற்றின் தரம் மிகவும் மோசம்.. விமான சேவைகள் கடுமையாக பாதிப்பு
© Copyright Newstamil 24x7 2024. All rights reserved