Also Watch
Read this
By: Web Team

பி.சி.சி.ஐ. புதிய தலைவராக இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியான நிலையில், அவரது தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சச்சின் டெண்டுல்கரின் எஸ்.ஆர்.டி ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மேன்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆதாரமற்ற ஊகங்களுக்கு நம்பகத்தன்மை அளிப்பதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.