மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், ஆஸ்திரேலியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. இலங்கையின், கொழும்புவில் சனிக்கிழமை நடைபெறவிருந்த 5-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவும், இலங்கை அணியும் விளையாட இருந்தன. ஆனால், கனமழை பெய்ததால் டாஸ் கூட போட முடியாமல் போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.