Also Watch
Read this
Posted on: Feb 17, 2026 09:13 AM
By: Manigandan Raja

சூப்பர் 8 சுற்று கனவு கேள்விக்குறி? :
டி-20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணி, சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது.
பல்லேகலே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கம் நன்றாக இருந்தாலும், அரைசதம் அடித்திருந்த கேப்டன் மிட்சேல் மார்ஷ் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆட்டமிழந்த பிறகு, அந்த அணியில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன.
20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலிய அணி 181 ரன்கள் சேர்த்தது. பின்னர் 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியில், பதும் நிசங்கா கடைசி வரை ஆட்டமிழக்காமல் சதமடித்து அசத்தினார்.
இதனால் அந்த அணி, 18 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டுமே இழந்து இலக்கை தாண்டி வெற்றி பெற்றது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved